Workplace Assessment for Safety and Hygiene (Wash)

Workplace Assessment fof Safety and Hygiene (Wash)

தமிழகத்தில் 47 கிளைகளுடன் செயல் பட்டுவரும் தங்கமயில் நிறுவனத்திற்கு, சுகாதார மதிப்பீட்டுக்கான தரச்சான்றிதழை இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் வழங்கினார்.

உலகம் முழுவதிலும் வைரஸ் தொற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, தற்சமயம் மீண்டு வரும் இவ்வேளையில் தூய்மையும், பாதுகாப்பும் இன்றியமையாதது.

தங்கமயில் நிறுவனம் சுகாதாரத்திற்காக அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், தொடர்ந்து பின்பற்றியும் வருகிறது. வணிகத்தில் வாடிக்கையாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிபட்ட வாடிக்கையாளர்களின் வருகையை சுகாதாரமாக வரவேற்று, தூய்மையான மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதே தங்கமயில் நிறுவனத்தின் உயரிய நோக்கமாகும்.

சுகாதாரத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தங்கமயில் நிறுவனம். தனது கிளையை சுகாதார மதிப்பீட்டீற்கான ஆய்விற்கு உட்படுத்தி அதில் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் முழு ஆதரவினால் மட்டுமே சாத்தியமாயிற்று.

சுகாதார மதிப்பீட்டீற்காக தங்கமயில் நிறுவனம் பின்பற்றி வரும் செயல்பாடுகள்:

தங்கமயில் நிறுவனத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி சோப்பு கொண்டு கை கழுவுவதற்கான வசதி செய்யப்பட்டு, ஷோரூம் வாசலில் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், குறைந்த அளவிலான இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மேலும் நிறுவனத்திற்குள் தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர்கள், மற்றும் சத்தான உணவுகளின் பட்டியல் அடங்கிய போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தினசரி கபசுர குடிநீர் மற்றும் வெந்நீர் வழங்கப்படுகிறது. அரசு ஆணையின் படி குளிர்சாதன வசதிகளின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் ஆய்வு செய்த இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளையும் தங்கமயில் நிறுவனம் சிறப்பாக பின்பற்றி வருவதை உறுதி படுத்தி தங்கமயில் நிறுவனத்திற்கு சுகாதார மதிப்பீட்டு சான்றிதழை வழங்கினர். சுகாதார மதிப்பீட்டுக்கான தரச்சான்றிதழை இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தமிழக பொறுப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தங்கமயில் இணை நிர்வாக இயக்குனர் திரு.N.Bகுமார் அவர்களிடம் வழங்கினார். பொது மேலாளர்கள் திரு.அருண் மற்றும் திரு.கிஷோர்லால் அவர்கள் உடன் இருந்தனர்.

இந்திய அளவில், நகை விற்பனையில் முதன் முதலில் தமிழகத்தில் தங்கமயில் நிறுவனத்திற்கு இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் அங்கீகாரம் செய்து சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source
https://epaper.dinakaran.com/2793512/Madurai-Supplement/21-08-2020#page/2/2

To Top